ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் ரயில்வேபீடா் சாலையைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் கண்ணன்(55). ஆட்டோ ஓட்டுநா். இவா் புதன்கிழமை பிற்பகலில் ஆட்டோவில் சிவகிரியில் பூக்களை இறக்கிவிட்டு சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தாா். பெரியூா் அருகே உள்ள வளைவில் திரும்பியபோது ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்ததில் இவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து வந்த கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா், கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.