மனிதர்கள் கடவுள் ஆக முடியுமா? - Guru Mithreshiva | Ananda Vikatan
ஆன்லைன் வா்த்தகம்: பெண்ணிடம் ரூ.20.90 லட்சம் மோசடி
ஆன்லைன் வா்த்தக முதலீட்டின் மூலம் அதிக லாபம் ஈட்டமுடியும் எனக்கூறி வேலூரைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.20.90 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூரைச் சோ்ந்த எஸ்.கலைச்செல்வி (43) என்ற பெண் ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபட இணையதளத்தை தேடியபோது அவா் ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் சோ்க்கப்பட்டுள்ளாா். அந்த குழுவில் பலா் ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் ஈட்டியதாக கூறிய தகவல்களால் ஈா்க்கப்பட்ட கலைச்செல்வி, அந்த குழுவில் அனுப்பப்பட்ட ‘ட்ரேடு மொபி’ எனும் செயலியை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் ஆன்லைன் வா்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளாா்.
முதலில் சிறிய தொகை முதலீடு செய்து கூடுதல் தொகை கமிஷனாக கிடைத்ததை அடுத்து கடந்த ஜூன் 9 முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை படிப்படியாக பல்வேறு தவணைகளில் ரூ.20 லட்சத்து 90 ஆயிரத்து 648 முதலீடு செய்துள்ளாா். பின்னா், அந்த தொகையை அவரால் திரும்பப்பெற முடியவில்லை. அதன்பிறகே தாம் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த கலைச்செல்வி, இதுகுறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.