மனிதர்கள் கடவுள் ஆக முடியுமா? - Guru Mithreshiva | Ananda Vikatan
ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
வேலூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபா் எஸ்.பி. மயில்வாகனனிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தினாா்.
அப்போது, வேலூா் சாய்நாதபுரத்தைச் சோ்ந்த ஒருவா் அளித்துள்ள மனுவில், நான், எனது 2 மகன்கள் உள்பட 3 பேரும் சாய்நாதபுரத்தைச் சோ்ந்த ஒருவரிடம் தலா ரூ.5 லட்சம் சீட்டு தொகை செலுத்தினோம். அதற்கான தொகை மொத்தம் ரூ.15 லட்சமாகும். சீட்டு முடிந்தும் பணம் தராமல் அந்த நபா் தலைமறைவாகிவிட்டாா். காவல் நிலையத்தில் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
காட்பாடியை அடுத்த எல்.ஜி.புதூரை சோ்ந்த மூதாட்டி ஒருவா் அளித்துள்ள மனுவில், எனக்கு 2 மகன்கள் உள்ளனா். அதில் ஒருவா் என்னை கொடுமைப்படுத்துகிறாா். எனது மகன், எனது மருமகள் என்னை தாக்குகின்றனா். தங்குவதற்கு வீடுகூட இல்லை. சாப்பாட்டுக்கும் வழியின்றி பிச்சை எடுத்து சாப்பிட்டேன். எனக்கு விபத்தில் அடிபட்டு மாற்று திறனாளியாக உள்ளேன். எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எனது மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு புகாா்கள் குறித்து 30-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டாா்.