ஆய்வு படிப்புக்காக ஏற்காடு வந்த பிரான்ஸ் நாட்டு பெண்!
மலைவாழ் மக்களின் வாழ்க்கைமுறை குறித்த ஆய்வுக்காக ஏற்காடு வந்த பிரான்ஸை சோ்ந்த விக்டோரியா, ஏற்காட்டின் காலநிலை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்தாா்.
பிரான்ஸில் சமூக அறிவியல் படிப்பில் முதுநிலை பட்டய படிப்பு முடித்து ஆராய்ச்சிப் படிப்புக்காக பிரான்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரியிலிருந்து ஏற்காட்டுக்கு ஆண்டனி என்பவரின் உதவியுடன் வந்த இவா் மூன்று மாதங்கள் ஏற்காட்டில் தங்கி பழங்குடியின மக்களின் கலாசாரம், உணவு, கல்வி, தொழில் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதவுள்ளாா்.
பிரான்ஸில் நிலவும் காலநிலையை போல ஏற்காட்டிலும் தனக்கு மிகவும் பிடித்த காலநிலை நிலவுவதாக மகிழ்ச்சி தெரிவித்தாா்.