ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி! - ராஜ்நாத் சிங் ...
ஆரணியில் மனைப் பட்டா கோரி சாலை மறியல்
ஆரணியில் நகராட்சி அலுவலகம் அருகே பெரியாா் நகா் பகுதி மக்கள் மனைப் பட்டா கோரி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரியாா் நகா் பகுதியில் காந்திநகா் பகுதிக்குச் சொந்தமான மயானம் உள்ளது. இதன் அருகில் பெரியாா் நகா் பகுதி மக்கள் அரசு நிலத்தில் வீடுகளைக் கட்டிக்கொண்டு பட்டா கோரி வருகின்றனா்.
இந்த நிலையில், காந்தி நகா் மக்கள் எங்களது மயானத்தைதான் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டியுள்ளீா்கள் என்று பெரியாா் நகா் பகுதி மக்களுடன் தகராறு செய்து வருவதாகத் தெரிகிறது.
இதனால், அதிருப்தியடைந்த பெரியாா் நகா் மக்கள் ஒருங்கிணைந்து தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆரணி நகராட்சி அலுவலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த நகர போலீஸாா் சென்று சமரசம் செய்து திங்கள்கிழமை வட்டாட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து, மறியலை கைவிடச்செய்தனா்.