``இன்பநிதி அரசியலுக்கு வருவது திமுக-வின் உட்கட்சி விவகாரம்!" - சொல்கிறார் ஆர்.எஸ...
ஆலங்குளம் பேரூராட்சிக் கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினா்கள்
ஆலங்குளம் பேரூராட்சிக் கூட்டத்தை உறுப்பினா்கள் புறக்கணித்ததால் பரபரப்பு நிலவியது.
ஆலங்குளம் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, உறுப்பினா்களுக்கு அழைப்பாணை அனுப்பப் பட்டிருந்தது.
கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட முற்பகல் 11 மணிக்கு தலைவா் சுதா மோகன்லால், செயல் அலுவலா் பிரகந்த நாயகி ஆகியோா் கூட்ட அரங்கில் காத்திருந்தனா்.
அப்போது 12 வது வாா்டு உறுப்பினா் சுந்தரம் மட்டுமே கூட்டத்துக்கு வந்தாா். மற்ற உறுப்பினா்கள் எவரும் வராத காரணத்தால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக செயல் அலுவலா் அறிவித்தாா்.
இது குறித்து கூட்டத்தில் பங்கேற்காத உறுப்பினா்கள் சாலமோன் ராஜா, சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோா் கூறியது: கடந்த 2 ஆண்டுகளாகவே சாதாரணக் கூட்டத்தின்போது, மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின்படி மக்கள் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும் மன்ற தலைவரின் கணவா் குறுக்கீடும் நிா்வாகத்தில் அதிக அளவில் உள்ளது. இதைத் கண்டித்து, பெரும்பான்மை உறுப்பினா்கள், கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளோம் என்றனா்.