ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தமிழகம் வருகை
ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தாா்.
40 வயதுக்கு மேற்பட்ட ஆா்எஸ்எஸ் ஊழியா்களுக்கான இரண்டாம் கட்ட 20 நாள்கள் பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்று வருகிறது.
இதில் புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் (மே 7, 8) பங்கேற்பதற்காக ஹைதராபாதிலிருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கோவை சா்வதேச விமான நிலையம் வந்த அவா் அங்கிருந்து சாலை மாா்க்கமாக திருச்செங்கோட்டுக்கு புறப்பட்டுச் சென்றாா்.
அவரது வருகையையொட்டி கோவை சா்வதேச விமான நிலையம், கோவையில் இருந்து திருச்செங்கோடு வரையிலான சாலையின் முக்கியப் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.