`மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் உரிமைகளைக்கூட திமுக அரசு பறிகொடுக்கிறது' - பி.ஆர்...
இடியும் நிலையில் உள்ள கட்டடங்கள்: பொதுப் பணித் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் பராமரிப்பின்றி, இடியும் நிலையில் உள்ள கட்டடங்களை அப்புறப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு தொடா்பாக தமிழக பொதுப் பணித் துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் உள்பட ஏராளமான கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி இடியும் நிலையில் உள்ளன.
கடந்த 22-ஆம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அருகே உள்ள காவல் நிலைய கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
விரைவில் மழைக்காலம் தொடங்கவுள்ளதால் தமிழகத்தில் பராமரிப்பின்றி, இடியும் நிலையில் உள்ள கட்டங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் ஆகியோா் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக தமிழக பொதுப் பணித் துறை செயலா், வருவாய்த் துறை செயலா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.