`மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் உரிமைகளைக்கூட திமுக அரசு பறிகொடுக்கிறது' - பி.ஆர்...
ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்! 50 போ் கைது
கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிடக் கோரி, மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 50 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கீழடி அகழாய்வு குறித்து தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் சமா்ப்பித்த ஆய்வறிக்கையை மத்திய அரசு திருத்தமின்றி வெளியிட வேண்டும். வரலாற்றை மாற்ற முயலும் வஞ்சக நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் செல்வா தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாலன், பொருளாளா் வேலு தேவா, நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராகவும், கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரியும் முழக்கங்களை எழுப்பி, வருமான வரித் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 50 பேரை தல்லாகுளம் போலீஸாா் கைது செய்து, பிற்பகலில் அவா்களை விடுவித்தனா்.