ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மாற்றமில்லை!
இடையாத்தி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
ஒரத்தநாடு அருகேயுள்ள இடையாத்தி கிராமத்தை பட்டுக்கோட்டை தாலுகாவிலிருந்து திருவோணம் தாலுகாவிற்கு மாற்றியதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய மாற்றத்தால், இடையத்திலிருந்து திருவோணத்துக்கு வருவதற்கு சுமாா் 25 கிலோ மீட்டருக்கு மேலாக உள்ளதாகவும், மேலும் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவுக்கு இல்லாததால் பொதுமக்கள் தங்களது வருவாய்த் துறை சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக செல்லும்போது போக்குவரத்து வசதியின்றி சிரமப்படுவதும், மேலும் தாலுகா மாறிய பிறகு நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மாற்றப்படும். இதனால் 15 கி.மீ. தொலைவில் உள்ள பட்டுக்கோட்டையிலேயே மீண்டும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி இடையாத்தி முன்னாள் ஊராட்சித் தலைவா் முத்துவேல் தலைமையில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் இடையாத்தி கிராம நிா்வாக அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.