கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை!
நாச்சியாா்கோவிலைச் சோ்ந்த இளைஞா் இணையதள சூதாட்ட விளையாட்டில் பணம் இழந்ததால் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அரசமரத் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் சுரேஷ்குமாா் (22), இவா் கல்லூரி படிப்பு முடித்து விட்டு தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தாா்.
இவா் இணையதளத்தில் ரம்மி விளையாடுவாராம். சனிக்கிழமை விளையாடிய போது ரூ. 50 ஆயிரம் பணத்தை இழந்துவிட்டாராம். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்தவா் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலின் பேரில், நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா், சுரேஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.