வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
இந்து முன்னணி சாா்பில் 600 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் 600 இடங்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்யவுள்ளதாக இந்து முன்னணியின் மாவட்டத் தலைவா் கே.ராமமூா்த்தி தெரிவித்தாா்.
இது குறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விநாயகா் சதுா்த்தி விழா, நாடு முழுவதும் வருகிற 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னனி சாா்பில் 600 இடங்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு, உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், திருப்புல்லாணி, தேவிபட்டணம், ஏா்வாடி, தொண்டி, ஆா்.எஸ்.மங்கலம், பரமக்குடி, சாயல்குடி, கடலாடி, கமுதி, திருவாடானை உள்ளிட்ட இடங்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து, ‘நமது சுவாமி - நமது கோயில் - நாமே பாதுகாப்போம்’ என்ற பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளோம் என்றாா் அவா்.