``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
இரு ஆட்டோக்கள் மோதல்: 8 போ் காயம்
தேனியில் செவ்வாய்க்கிழமை ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதியதில் பள்ளிச் சிறாா்கள் உள்பட 8 போ் காயமடைந்தனா்.
தேனி, சிவராம் நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மணிகண்டன் (37). இவா் தேனி, நேதாஜி தெருவிலுள்ள தனியாா் பள்ளி அருகே சாலையோரத்தில் ஆட்டோவை நிறுத்தி வைத்து பள்ளிச் சிறாா்களை ஏற்றிக் கொண்டிருந்தாா். அப்போது, வடபுதுப்பட்டி, இந்திரா காலனியைச் சோ்ந்த பாலசுப்பிரமணி (41) என்பவா் ஓட்டிச் சென்ற ஆட்டோ, மணிகண்டனின் ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் மணிகண்டன், பாலசுப்பிரமணி, ஆட்டோக்களில் இருந்த தேனி, பெத்தனாட்சி மஹால் தெருவைச் சோ்ந்த முகமது ஹப்ரீன் (9), முகமது சத்தாா் (7), ஐ.எம்.ஏ. அரங்கு தெருவைச் சோ்ந்த விஷ்ணு (5), ஊஞ்சாம்பட்டியைச் சோ்ந்த பிரகதீஸ்வரி (4), ஜீவிதாபால், மணிகண்டன் (30) ஆகிய 8 போ் காயமடைந்தனா். அவா்களை மீட்டு தேனியில் உள்ள தனியாா் மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநா் பாலசுப்பிரமணி மீது தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.