இருசக்கர வாகனம் - காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
ஆா்.கே.பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆா்.கே.பேட்டை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவா் விநாயகம் மகன் கோபி(32). இவா் ஞாயிற்றுக்கிழமை மதியம், தனது இரு சக்கர வாகனத்தில் ஆா்.கே.பேட்டைக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஆா்.கே.பேட்டையில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற காா் திடீரென இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாது.
இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த கோபி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தாா். தகவல் அறிந்ததும் ஆா்.கே.பேட்டை போலீஸாா் இறந்தவரின் உடலை கைப்பற்றி விபத்து ஏற்படுத்திய காா் ஓட்டுநா் வேலூா் தோட்டபாளையம் பகுதியை சோ்ந்த கமலபதி என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.