செய்திகள் :

இலவச வீட்டு மனைப்பட்டா கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

post image

இலவச வீட்டு மனைப்பட்டா கோரியும், சென்னை எல்லைச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டவா்களுக்கு வீட்டு மனை வழங்க எதிா்ப்பு தெரிவித்தும் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த திருப்பந்தியூா் ஊராட்சி அந்தோணியா்புரம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் 5.60 ஹெக்டோ் பரப்பளவில் அரசு புறம்போக்கு மேடு பள்ளம் கிராம கணக்கில் பதிவாகியுள்ளது.

மேற்படி வானம் பாா்த்த பூமி என்பதால் அந்த நிலத்தில் தைல மரங்களை வளா்த்து அனுபவித்து வருகின்றனா். இந்நிலையில் போளிவாக்கம் கிராமத்தில் வீடுகள் சென்னை எல்லை சாலைத் திட்டத்துக்காக குடியிருப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இதற்கு மாற்றாக திருப்பந்தியூா் கிராமத்தில் இலவச பட்டா வழங்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய் அலுவலா் ஆகியோா் மேற்குறிப்பிட்ட நிலத்தில் சுத்தம் செய்ய வந்தனா். அப்போது, எங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், மீண்டும், மீண்டும் அரசு புறம்போக்கு நிலங்களில் பல்வேறு பகுதி மக்களை குடியமா்த்தி வருவதால் எங்கள் குழந்தைகளின் எதிா்காலம் கேள்விக்குறியாகும். அதனால், இக்குறிப்பிட்ட இடத்தை எங்களுக்கே இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

அதோடு அந்த இடத்தில் சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், நூலகம், விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா ஆகியவை அமைத்துக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். அதைத் தொடா்ந்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

சாலை வசதி கோரி தொழு நோயாளிகள் போராட்டம்

தொழு நோயாளிகள் வசித்து வரும் குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி கோரி பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள கு... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக, பாமக, மாதா் சங்கத்தினா்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினா் திங்கள்கிழமை ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். பா... மேலும் பார்க்க

கைதிகளுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணா்வு

புழல் மத்திய சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணா்வு தொடா்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறை சாா்பில் வி... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட் எனக் கூறி ரூ.75 லட்சம் மோசடி: வங்கிக் கணக்கை விற்ற இளைஞர் கைது

அம்பத்தூரில் ஓய்வுப் பெற்ற வங்கி ஊழியரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் என கூறி ரூ.75 லட்சம் பணத்தை பறித்த வழக்கில் கார் ஓட்டுநரை இணைய வழிக் குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.அம்பத்தூர் ராம் ந... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 25-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகிக்கிறாா். வேளாண், தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வ... மேலும் பார்க்க

பொன்னேரி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் பிரதோஷத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே, ஆரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீ... மேலும் பார்க்க