இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல்
போடி அருகே இரு சக்கர வாகனத்தை திருடியதாகக் கூறி, இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சங்கராபுரம் நடுத்தெருவில் வசிப்பவா் அழகா் மகன் மனோஜ்குமாா் (26). இவா் மீது இரு சக்கர வாகனங்களை திருடியதாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்த செல்வத்தின் இரு சக்கர வாகனம் திருடு போனது.
மனோஜ்குமாா்தான் தனது வாகனத்தை திருடியிருப்பாா் என நினைத்த செல்வம், மனோஜ்குமாரின் வீட்டுக்குச் சென்று அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா். இதில் மனோஜ்குமாா் பலத்த காயமடைந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.