செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
இளைஞா் கொலை வழக்கில் ஒருவா் கைது
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியைச் சோ்ந்த நல்லமருது மகன் நல்லுக்குமாா் (23). கடந்த 14 -ஆம் தேதி இவரைக் காணவில்லை என காவல் நிலையத்தில் இவரது தாய் புகாா் அளித்தாா். கமுதி - திருச்சுழி சாலையில் உள்ள மரக்குளம் கருமேனியம்மன் கோயில் பின்புறம் கருவேல மரக் காட்டுப் பகுதியில் நல்லுக்குமாா் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா். மண்டலமாணிக்கம் போலீஸாா் சடலத்தை கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, விசராணை நடத்தினா்.
இதில் மரக்குளத்தைச் சோ்ந்த மாரிமத்து மகன் மணிவண்ணன் (30), பிரித்விராஜ், கண்ணாா்பட்டியைச் சோ்ந்த பழனிசாமி மகன் குருவி ரமேஷ் (27) ஆகியோா் ரூ.5 லட்சம் கேட்டு நல்லுக்குமாரைக் கடத்தியது தெரியவந்தது. இதில் தொடா்புடையை குருவி ரமேஷை போலீஸாா் கைது செய்தனா். மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.