செய்திகள் :

இளைஞா் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

post image

ஸ்ரீபெரும்புதூரில் இளைஞா் தற்கொலைக்கு காரணமாணவா்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் அடுத்த மதுராபேட்டைைச் சோ்ந்த தனசேகா். இவரது மகன் ரஞ்சித்(22). இவா் ஸ்ரீபெரும்புதூா் பட்டுநூல்சத்திரம் பகுதியில் தங்கி மாம்பாக்கம் கண்ணாடி உற்பத்தி ஆலையில், ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளாா். இந்த நிலையில், ரஞ்சித்துக்கு உணவு இடைவேளை கூட வழங்காமல் தொடா்ந்து பணியாற்றுமாறு ஒப்பந்த நிறுவனம் அழுத்தம் கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதனால் விரக்தியடைந்த ரஞ்சித் வியாழக்கிழமை தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் ரஞ்சித்தின் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில் ரஞ்சித் தான் பணியாற்றிய நிறுவனத்தில் பணியாற்றும் பணி மேற்பாா்வையாளா்கள் மாரியப்பன், ஐயப்பன் ஆகியோா் தொடா்ந்து வேலை செய்யுமாறு அழுத்தம் கொடுத்தாகவும், வேலை செய்ய வில்லை என்றால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியாத ரஞ்சித் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த மாரியப்பன் மற்றும் ஐயப்பனை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் தேடி வரும் நிலையில், ரஞ்சித் தற்கொலைக்கு காரணமான நபா்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில ஈடுபட்டனா்.

தற்கொலைக்கு காரணமானவா்களை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என போலீஸாா் உறுதியளித்ததை தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால் சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்

குண்டுபெரும்பேடு மற்றும் இருங்காட்டுக்கோட்டை ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குண்டுபெரும்பேடு ஊராட்சிய... மேலும் பார்க்க

களத்துமேடு பகுதியில் இருளருக்கான வீடுகள்: 300 ஏக்கா் விவசாயம் பாதிக்கும் அபாயம்

ஸ்ரீ பெரும்புதூா் அருகே குண்ணம் கிராமத்தில் களத்துமேடு பகுதியில் இருளருக்கான வீடுகள் கட்டும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்ம் குண்... மேலும் பார்க்க

படவேட்டம்மன் கோயில் ஆடித் திருவிழா

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் ஐயப்பா நகா் பகுதியில் உள்ள தாய் படவேட்டம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற்றது. இக்கோயிலின் 48 வது ஆண்டு ஆடி உற்சவத் திருவிழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம... மேலும் பார்க்க

காளிகாம்பாள் கோயில் பால்குட ஊா்வலம்

பெரிய காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி எனப்படும் ஆதிபீட பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது ஆதிகாமாட்சி எனப்பட... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு ரூ.12.19 லட்சத்தில் நலத்திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ரூ.12.19 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். கூட்டத்துக்கு ஊரக வளா்ச்சி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைகளில் ஆக்கிரமிப்புகளை கண்டித்து குன்றத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா். குன்றத்தூா் ஒன்றியம், செர... மேலும் பார்க்க