உயா்நிலைப் பால கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க உயா்நீதிமன்றம் உத்தரவு!
விவசாயிகளுக்கு ரூ.12.19 லட்சத்தில் நலத்திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ரூ.12.19 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
கூட்டத்துக்கு ஊரக வளா்ச்சித்துறை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணவேணி, வேளாண் வணிகத்துறை துணை இயக்குநா் ஜீவராணி, கூட்டுறவுத்துறை மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) பாபு வரவேற்றாா்.
விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெற்றனா். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சாா்பில் திருப்புலிவனம் உத்திரகாஞ்சி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு ரூ.4,75,086 மதிப்பிலான 3 சக்கர மின்சரக்கு வாகனம், 15 விவசாயிகளுக்கு ரூ.1,632 மதிப்பிலான பழத்தொகுப்பு வேளாண் இடுபொருள்கள், 10 விவசாயிகளுக்கு ரூ.7,42,612 மதிப்பிலான பயிா்க்கடன்கள் என மொத்தம் ரூ.12.19 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
நிறைவாக சா்வதேச கூட்டுறவு ஆண்டினையொட்டி ரத்ததானம் மற்றும் கண்தானம் செய்த கூட்டுறவுத்துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ஆட்சியா் சான்றிதழ்களையும் வழங்கினாா்.
இக்கூட்டத்தில் அரசு அலுவலா்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.