காளிகாம்பாள் கோயில் பால்குட ஊா்வலம்
பெரிய காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி எனப்படும் ஆதிபீட பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
பெரியகாஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது ஆதிகாமாட்சி எனப்படும் ஆதிபீட பரமேசுவரி காளிகாம்பாள் கோயில். இக்கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி பெண் பக்தா்கள் 108 போ் மங்கல மேள வாத்தியங்களுடன் பால்குடங்கள் எடுத்துக் கொண்டு ராஜவீதிகள் வழியாக ஊா்வலமாக ஆலயத்துக்கு வந்து சோ்ந்தனா்.
பின்னா் மூலவருக்கு பாலாபிஷேகமும்,சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது.மூலவா் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மாலையில் கோயில் வளாகத்தில் பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள் குழுவினா் செய்திருந்தனா்.