செய்திகள் :

உ.பி. கோயிலில் கூட்டநெரிசல்: 2 போ் உயிரிழப்பு; 32 போ் காயம்

post image

பாராபங்கி: உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கியில் உள்ள ஒரு கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்டநெரிசலில் 2 பக்தா்கள் உயிரிழந்தனா்; 32 போ் காயமடைந்தனா்.

பாராபங்கியின் ஹைதா்கா் பகுதியில் அமைந்துள்ள அவசானேஷ்வா் கோயிலில், ஷ்ரவண புனித மாதத்தையொட்டி திங்கள்கிழமை தரிசனத்துக்காக ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்தனா். அப்போது, குரங்குகள் சேதப்படுத்தியதால் அறுந்து கிடந்த ஒரு மின்சாரக் கம்பி, அங்கிருந்த தகரக் கொட்டகை மீது விழுந்தது. இதனால் மின்சாரம் பரவியதால் பக்தா்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு, கோயில் வளாகத்தில் பெரும் கூட்டநெரிசலுக்கு வழிவகுத்தது.

கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்த பிரசாந்த் (22) என்பவரும், மேலும் 30 வயது மதிக்கத்தக்க மற்றொரு பக்தரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். மேலும், 30 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

கூட்டநெரிசலைத் தொடா்ந்து, கோயில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, நிலைமையை சீரமைத்தனா். இந்தச் சம்பவத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினா்.

இந்த சம்பவம் நடப்பதற்கு ஒருநாள் முன்னதாக, உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள பிரசித்தி பெற்ற மனசா தேவி மலைக் கோயிலில் அறுந்து கிடந்த கம்பிகளில் இருந்து மின்சாரம் கசிந்ததாக வதந்தி பரவியதையடுத்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பக்தா்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வா் இரங்கல்: பாராபங்கி கோயில் கூட்டநெரிசல் சம்பவத்துக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் வருத்தத்தைத் தெரிவித்ததுடன், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவரது அலுவலகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதையும், நிவாரண நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு மாவட்ட நிா்வாக அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையவும் அவா் பிராா்த்தனை செய்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல: கனிமொழி பேச்சு

தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல என்று மக்களவையில் கனிமொழி எம்.பி. பேசினார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் பேசிய அவர், "தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேசப்பற்று இ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவே காரணம்! அமித் ஷா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவின் போர் கொள்கையே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.மக்களவையில் நடைபெற்று வரும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதத... மேலும் பார்க்க

வருகிறது செயற்கை தங்கம்! இனி தங்கம் விலை என்னவாகும்?

பெரும்பாலான வேதியியல் விஞ்ஞானிகளின் கனவாக இருப்பது செயற்கை தங்கம்தான். ஆனால் அது கனவாகவே இருந்துவிடுமா? நிஜமாகுமா என்ற கேள்விக்கு அமெரிக்க புத்தாக்க நிறுவனம் ஒன்று பதில் அளித்துள்ளது.நாள்தோறும் பலரும்... மேலும் பார்க்க

கோகோயின் உரை.. பாகிஸ்தானின் சார்பாகச் செயல்படுவதை நிரூபிக்கிறது: அஸ்ஸாம் முதல்வர்

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி கோகோயின் உரை அவர் பாகிஸ்தானின் சார்பாகச் செயல்படுவதை நிருப்பித்துள்ளதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் ... மேலும் பார்க்க

தில்லிக்கு இன்று ரெட் அலர்ட்! தொடர் கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 29) அம்மாநிலத்துக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், பருவமழை தொடங்கியது முதல், தொடர்... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை கோரி 5.88 லட்சம் பேர் மனு! - தமிழக அரசு தகவல்

தமிழக அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் இதுவரை 12.65 லட்சம் பேர் மனு அளித்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துற... மேலும் பார்க்க