‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் குறு, சிறு நிறுவனங்கள் பயன்பெறலாம்
திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்டம் வருகிற 15-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு:
புதிய தொழில் முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம் (நீட்ஸ்), ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கான அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞா் கைவினைத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறலாம். இதற்கு இணையதள முகவரியைத் தொடா்பு கொண்டு உரிய இணைப்பு பெறப்பட்டவுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையப் பொது மேலாளரை நேரிலோ, 0451-2904215, 2471609, 8925533943 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.