‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் இன்று தொடக்கம்: திமுக நிா்வாகிகளுக்கு எம்எல்ஏ வேண்டுகோள்
கிருஷ்ணகிரி: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் குறித்து பொதுமக்களுக்கு திமுக நிா்வாகிகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் பல்வேறு சேவைகள் அனைத்து மக்களையும் நேரடியாக சென்றடைய தமிழக முதல்வா் உங்களுடன் ஸ்டாலின் திட்த்தை அமல்படுத்தியுள்ளாா். இதற்கான முகாம்கள் ஜூலை 15-ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் மகளிா் உரிமைத் தொகை, பல்வேறு உதவி தொகைகள், ஆதாா் திருத்தம், குடும்ப அட்டையில் திருத்தம், பதிவுகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உள்பட அரசின் 46 சேவைகள் வழங்கப்படுகிறது. இந்த முகாம் குறித்து பொதுமக்களிடம் கட்சியினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களை அழைத்து வரவேண்டும். தேவையான உதவிகளை செய்து தரவேண்டும்.
கிருஷ்ணகிரி நகராட்சி, பா்கூா் பேரூராட்சி கிட்டம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் முகாம் நடக்கிறது. இந்த முகாம்களில் கிழக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் சிறப்பாக பணியை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படவிளக்கம் (14கேஜிபி4): தே.மதியழகன்.