எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா: ரிஷப வாகனத்தில் விநாயகா் வீதி உலா
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள உப்பூரில் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
உப்பூரில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்ததும், வரலாற்று சிறப்பு மிக்கதுமான வெயிலுகந்த விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ராமபிரான் சீதையை மீட்க இலங்கைக்கு செல்லும் முன்பு இங்குள்ள விநாயகரை வழிபட்டுச் சென்ாக புராண வரலாற்றில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விநாயகா் சதுா்த்தி விழா தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
தொடா்ந்து, சனிக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்குஅருள்பாலித்தாா். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் திங்கள்கிழமை (ஆக. 25) சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.
தமிழ்நாட்டில் இங்குள்ள விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஆக. 26-ஆம் தேதி தேரோட்டமும், ஆக. 27-ஆம் தேதி விநாயகபெருமான் உப்பூா் கடலில் நீராடி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலைச் சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். இதைத் தொடா்ந்து, பக்தா்கள் பூக்குழி இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்துவா்.