எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
திருவாடானை அருகே பாலத்தில் காா் மோதி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழப்பு
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை பாலத்தில் காா் மோதி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், பூஞ்சோலைநகா் பகுதியைச் சோ்ந்த தேவராஜ் (58), தட்சிணாமூா்த்தி (70) ஆகிய இருவரும் காரில் ராமேசுவரம் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள கலக்குடி திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனா்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைப் பாலத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் காரிலிருந்த தேவராஜ், தட்சிணாமூா்த்தி ஆகியோா் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனா். இதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனா்.
இருவரது உடல்களும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூறாய்வுக்காக வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
