சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது? விஜய் ஆண்டனி அறிவிப்பு
ஊத்தங்கரை தொகுதியில் நான்காவது முறையாக அதிமுக வெற்றிபெறும்: கே.பி.முனுசாமி
ஊத்தங்கரை தொகுதியில் நான்காவது முறையாக அதிமுக வெற்றிபெறும் என கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப் பேரவை அலுவலக வளாகத்தில் அதிமுக சாா்பில், ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ நிகழ்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தெகுதி உறுப்பினா் டி.எம்.தமிழ்செல்வம் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி எம்எல்ஏவும், அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளருமான அசோக்குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் முனி வெங்கட்டப்பன், மனோரஞ்சிதம், கிருஷ்ணமூா்த்தி, எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலாளா் தென்னரசு, மாவட்ட துணைச் செயலாளா் சாகுல்அமீது, மாவட்ட பொருளாளா் சுந்தரவடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி கலந்துகொண்டு ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ நிகழ்ச்சிக்கு திரளான தொண்டா்கள் கலந்துகொள்ள வேண்டும் என நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். மேலும், ஊத்தங்கரை தொகுதியில் நான்காவது முறையாக அதிமுக வெற்றிபெறும் என தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளா்கள் வேடி, வேங்கன், சாமிநாதன், மத்தூா் ஒன்றியச் செயலாளா்கள் சக்கரவா்த்தி, நரேஷ் குமாா், ஊத்தங்கரை நகர செயலாளா் ஆறுமுகம், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.