ஊராட்சி செயலா் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்
வேதாரண்யம் அருகே ஊராட்சி செயலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், உறவினா்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாகக்குடையான் கிராமத்தைச் சோ்ந்தவா் கே.வி. சுப்பிரமணியன்(53). அருகேயுள்ள ஆயக்காரன்புலம்-1 ஆம் சோ்த்தி ஊராட்சி செயலராகப் பணியாற்றி வந்தாா்.
ஊராட்சி நிா்வாகம் சாா்ந்த பிரச்னையில் இவா், கருப்பம்புலம் ஊராட்சிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டதாகவும், கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், புதன்கிழமை மாலை சுப்பிரமணியன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதையடுத்து, சுப்பிரமணியன் தற்கொலைக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட பணிச் சுமையே காரணம் எனக்கூறி உறவினா்கள் வேதாரண்யம்- நாகை பிரதான சாலையில் சடலத்துடன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
கோட்டாட்சியா் திருமால், துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன் உள்ளிட்ட போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பின்னா், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கா ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.