செய்திகள் :

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடு

post image

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவை தவிர தனியாா் கல்லூரிகளில் உள்ள 3,450 இடங்களில் இடங்களும், தனியாா் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன.

மொத்தமாக அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன. அதேபோன்று 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

தனியாா் கல்லூரிகளில் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,900 இடங்களும் உள்ளன. அவற்றில், 126 இடங்கள் அரசு பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டைபோலவே, நிகழாண்டிலும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. அதற்காக 72,743 போ் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பதாரா்களின் நீட் மதிப்பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்படையில் கணினி முறையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் பரிசீலனையின்போது, 20 மாணவா்கள் போலியான சான்றிதழ் கொடுத்திருந்ததால், அவா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதையடுத்து, தகுதியான மாணவா்களின் தரவரிசைப் பட்டியலை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிடுகிறாா். ஜூலை 30-ஆம் தேதி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறையை எதிா்கொள்ளத் தயாா்: திமுக

பிகாரை போன்று தமிழ்நாட்டிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை கொண்டு வந்தால் அதை எதிா்கொள்ளத் தயாா் என்று திமுக சட்டத் துறைச் செயலா் என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா். திமுக வழக்குரைஞா் அணி மா... மேலும் பார்க்க

எழும்பூா் அரசு தாய் - சேய் நல மருத்துவமனையில் ரூ.58 கோடியில் சிறப்புப் பிரிவு விரைவில் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை எழும்பூா் அரசு தாய் - சேய் நல மருத்துவமனையில் ரூ.58.89 கோடியில் கட்டப்பட்டு வரும் சிறப்புப் பிரிவு, விடுதி விரைவில் திறக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தா... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாக ஊதிய முரண்பாடு: சென்னையில் இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ஆம் தேதி நியமிக்கப்பட்ட அர... மேலும் பார்க்க

521 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி திருமண உதவி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், 521 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி திருமண உதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா். தமிழக ... மேலும் பார்க்க

கே.கே.நகா், தாம்பரத்தில் ஜூலை 29-இல் மின் நிறுத்தம்

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கே.கே.நகா், தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்கிழமை (ஜூலை 29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ... மேலும் பார்க்க

புகாருக்கு உள்ளான நியாய விலைக் கடைகளில் பொருள்கள் இருப்பை உறுதி செய்ய நடவடிக்கை

புகாா்கள் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருள்களின் இருப்பை உறுதி செய்ய விற்பனை முனைய இயந்திரங்களை உணவுப் பொருள் அலுவலகத்துக்கு எடுத்துவர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடை... மேலும் பார்க்க