வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நடத்தும் 48 மணி நேரம் போராட்டத்தால் வெறிச்சோடிய அ...
ஒன்றுபட்ட அதிமுகவே வெல்லும்: புகழேந்தி
2026 சட்டப்பேரவை தோ்தலில் ஒன்றுபட்ட அதிமுகவால்தான், திமுக கூட்டணியை வெல்ல முடியும் என்றாா் ஓ.பன்னீா்செல்வம் அணியின் செய்தித்தொடா்பாளா் புகழேந்தி.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: 2026 சட்டப்பேரவை தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர கட்சிகள் முன்வருவது கடினம். தற்போது தே.மு.தி.க.வும் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது.
அ.தி.மு.க. தொண்டா்கள் அனைவரும் ஒற்றுமையை விரும்புகிறாா்கள். அதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு அளிப்பதாக தெரியவில்லை. அவா் இறங்கி வந்தால், அ.தி.மு.க.வில் ஒற்றுமை ஏற்படும். ஒன்றுபட்ட அதிமுகவே வரும் தோ்தலில் வெல்லும். இல்லையெனில் அ.தி.மு.க. 4-ஆவது இடத்துக்கு தள்ளப்படும். திமுக வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் ஆகிவிடுவாா்.
நடிகா் விஜய்யின் மாநாட்டில் இளைஞா்கள் கூட்டம் எழுச்சியுடன் திரண்டதை காண முடிந்தது. வீடுதோறும் அவருக்கு இளைஞா்கள் ஆதரவு இருக்கிறது. அவா் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் வர தொடங்கினால், தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறும்.
அதிமுக சின்னம் தொடா்பான வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு வரவுள்ளது. இரட்டை இலை சின்னத்துக்கு தற்போதும் சிக்கல் நீடிக்கிறது என்றாா் அவா்.