ஓட்டப்பிடாரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி 2, 14-ஆவது வாா்டு மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், அய்யாசாமிகாலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுவதை பாா்வையிட்டாா். முகாமில் மனு வழங்கிய மனுதாரா்களுக்கு, மின் வாரியம், பொது விநியோக திட்ட பெயா் திருத்தத்துக்கான ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி பணிக் குழுத் தலைவா் கீதா முருகேசன், வட்டாட்சியா்கள் முரளிதரன், முருகேஸ்வரி, மாநகராட்சி உதவி ஆணையா் சுரேஷ்குமாா், உதவி பொறியாளா் முனீஸ், இளநிலை பொறியாளா் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.