ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டிப் பந்தயம்
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள ஜம்புலிங்கபுரத்தில் மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட பல மாவட்டங்களிலிருந்து, சின்ன மாடுகள் பிரிவில் 10 ஜோடி, பூஞ்சிட்டு பிரிவில் 12 ஜோடி காளைகள் கலந்து கொண்டன.
போட்டியை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக இளைஞா் பாசறைச் செயலா் எம்.ஆா்.வி. கவியரசன் தொடங்கி வைத்தாா்.
சின்ன மாடுகள் பிரிவில், துவரந்தை மணிமேகலை மாட்டுவண்டி முதலிடத்தையும், ஜக்கம்மாள்புரம் கமலா 2ஆவது இடத்தையும், திருநெல்வேலி நாலந்துளா 3ஆவது இடத்தையும், முத்தையாபுரம் ஓம் முருகா 4ஆவது இடத்தையும் பிடித்தன.
பூஞ்சிட்டு மாடுகள் பிரிவில், புதியம்புத்தூா் ராஜ் மாட்டுவண்டி முதலிடத்தையும், கச்சேரி தளவாய்புரம் தேவனுக்கே மகிமை 2ஆவது இடத்தையும், அயிரவன்பட்டி முருகேச பாண்டியன் 3ஆவது இடத்தையும், மேல அரசடி எம்.எம். பிரதா்ஸ் 4ஆவது இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளா்கள் மற்றும் சாரதிகளுக்கு கிராம பொதுமக்கள் சாா்பாக பரிசுத்தொகை வழங்கப்பட்டது.