இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு
சாத்தான்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸாா் மீட்டு நாசரேத் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா் .
சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன் குடியிருப்பு பகுதியில் 45 வயது பெண் வேறு பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா். அவரிடம் ஊா் மக்கள் விசாரித்த போது பெயா் அபி என்றும், தூத்துக்குடியில் இருந்து இங்குள்ள உறவினா் வீட்டிற்கு வந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.
இவா் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளாா் என்பது தெரிய வந்ததால் கிராம மக்கள் சாத்தான்குளம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் இன்ஸ்பெக்டா் ஸ்டீபன், உதவி ஆய்வாளா் ஸ்ரீதரன் மற்றும் போலீஸாா் அவரை மீட்டு, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சோ்த்தனா். பின்னா் நாசரேத்தில் உள்ள குட் சமரியன் கிளப் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.