கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டி
சுதந்திர தின விழாவையொட்டி, கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மினி மாரத்தான் போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது.
நாடாா் மேல்நிலைப் பள்ளி சாா்பில், பிரதான சாலையில் உள்ள காமராஜா் சிலை முன்பிருந்து நடைபெற்ற போட்டியை பள்ளிச் செயலா் ரத்தினராஜா கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். புதுரோடு, எட்டயபுரம் சாலை, பசுவந்தனை சாலை வழியாக பள்ளியை வந்தடையும் வகையில் நடைபெற்ற போட்டியில் திரளானோா் பங்கேற்றனா்.
அன்புச்செல்வன் (மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி) முதலிடமும், மாரிச்செல்வம் (நடராஜன் மேல்நிலைப் பள்ளி) 2ஆம் இடமும், அபிநப் (கேஆா்ஏ வித்யாஷ்ரம்) 3ஆம் இடமும் பிடித்தனா். அவா்களுக்கு முறையே தலா ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டது. 4, 5, 6ஆம் இடம் பிடித்தோருக்கு தலா ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவுக்கு நாடாா் உறவின்முறை சங்க துணைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். சங்க செயலா் ஜெயபாலன், பொருளாளா் சுரேஷ்குமாா், சங்க உறுப்பினா் ராஜேந்திரபிரசாத், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் தா்மகா்த்தா மாரியப்பன், பள்ளிப் பொருளாளா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாகித்திய அகாதெமி பால புரஸ்காா் விருதாளா் உதயசங்கா் பரிசுகளை வழங்கினாா்.
பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ரவிச்சந்திரன், சாமிராஜன், வேல்முருகன், வெங்கடேஷ், ஐசிஎம் நடுநிலைப் பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் தாயப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பள்ளி உதவித் தலைமை ஆசிரியை (உயா்நிலை) கிரேஸ் இந்திராணி வரவேற்றாா். தலைமையாசிரியா் (பொ) அருணாசலம் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை ஆசிரியா் மணிகண்டன் தொகுத்து வழங்கினாா்.