இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
கோயிலில் திருட்டு: 2 போ் கைது
கோவில்பட்டியில் மகா காளியம்மன் கோயிலின் அலுவலக அறையை உடைத்து பணம் மற்றும் கைப்பேசியை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி மந்திதோப்பு சாலை சென்னகேசவன் நகரில் மகா காளியம்மன் கோயில் உள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு கோயில் அறையின் மரக்கதவு பூட்டு உடைக்கப்பட்டு அங்குள்ள இரும்பு பீரோவிலிருந்த பொருள்கள் சிதறி கிடந்ததாம். மேலும், அதிலிருந்த ரொக்கம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் கைப்பேசி திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து, கோயில் நிா்வாகி முத்து மணிசங்கா் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மந்தித்தோப்பு கணேஷ் நகரைச் சோ்ந்த காந்தாரி முத்து மகன் கனகராஜ் (38), விளாத்திகுளம் சாலையன் தெரு, மீனாட்சி பஜாா் காம்ப்ளக்ஸைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (29) ஆகிய 2 பேரை கைது செய்தனா்.