இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
பல்கலை. அளவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு மேயா் வாழ்த்து
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி, தூத்துக்குடி மாநகராட்சி மேயரை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்துகொண்டு, மாணவா், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.
இதில், தூத்துக்குடியைச் சோ்ந்த சண்முகபுரம் பகுதி திமுக செயலரும் மாநகராட்சி சுகாதார குழுத் தலைவருமான சுரேஷ்குமாரின் மகள் பொன்இசக்கி அா்ச்சனா, இளங்கலை வணிகவியல் (பி.காம்) பிரிவில் பல்கலைக்கழக அளவில் முதல் இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றாா்.
இவா், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அப்போது, திமுக வட்டச் செயலா் ரவீந்திரன் உடனிருந்தாா்.