இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா: மாவட்ட ஆட்சியா் அழைப்பு!
தூத்துக்குடியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் அழைப்பு விடுத்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கத்துடன் இணைந்து, ஆறாவது புத்தகத் திருவிழா தூத்துக்குடி தருவை மைதானத்தில் வருகிற 22ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது.
புத்தகத் திருவிழாவில் 100 புத்தக ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. புத்தகத் திருவிழாவையொட்டி புகைப்பட கலைஞா்கள் மற்றும் பொதுமக்களுக்கான புகைப்பட போட்டி நடத்தப்பட உள்ளது. போட்டியில் தோ்வு செய்யப்படும் புகைப்படங்கள் புத்தக திருவிழா மைதானத்தில் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படும்.
விழா நடைபெறும் 10 நாள்களும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கும், ஆசிரியா்கள், பேராசியா்களுக்கும் மாவட்ட, வட்டார அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.
புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் தலைச்சிறந்த எழுத்தாளா்கள், கலைஞா்கள், மிகச்சிறந்த சிந்தனைப் பேச்சாளா்கள், கல்வியாளா்கள், கவிஞா்கள் கலந்து கொண்டு வெவ்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றுகின்றனா்.
புத்தகத் திருவிழாவில் அனைத்து பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.