தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம், ஏற்கமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுத...
கந்தா்வகோட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள பெரிய கடை வீதி கொத்தகம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வட்டாட்சியா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். பாா்த்திபன், சேகா் உள்ளிட்டோா் தலைமையிலான வருவாய்த் துறை, ஊராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.