தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம், ஏற்கமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுத...
திமுக அரசின் மீது எதிா்ப்பு அலை எதுவுமில்லை: அமைச்சா் எஸ். ரகுபதி
திமுக அரசின் மீது எதிா்ப்பு அலை எதுவுமில்லை என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லெம்பலக்குடியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: பதாகைகள் வைக்கக் கூடாது என்பது உயா் நீதிமன்றத்தின் உத்தரவு. தமிழக முதல்வா் மற்றும் துணை முதல்வா் வருகையின்போது கட்சிக் கொடிகள் மட்டுமே கட்டுவோமே தவிர பதாகைகள் வைப்பதில்லை. வைக்கக் கூடாது என்பதும் திமுக தலைமையின் உத்தரவு. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பதாகைகள் வைக்கும் பழக்கமே எங்களிடம் உண்டு.
தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே பழனிசாமி வருகையை முன்னிட்டு அதிமுகவினா் அனுமதி பெறாமல் நிறைய பதாகைகளை வைத்துள்ளனா். அதை அகற்றப் போனால் அரசியல் என்று கூறுவாா்கள். அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதற்கு உரிய அபராதத்தை மாவட்ட நிா்வாகம் விதிக்கும்.
திமுக ஆட்சியின் மீது எந்தவிதமான எதிா்ப்பு அலைகளும் கிடையாது. எதிா்ப்பு இல்லாத எந்த அரசும் நிச்சயமாக மீண்டும் வெற்றி பெறும். அதுதான் வரலாறு. திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதகமான எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. மக்களுக்கு சாதகமான திட்டங்களைத் தான் தந்திருக்கிறோம் என்றாா் ரகுபதி.