சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது? விஜய் ஆண்டனி அறிவிப்பு
மரத்தின் மீது பைக் மோதியதில் மனைவி கண்முன்னே கணவா் பலி
பொன்னமராவதி அருகே செவ்வாய்க்கிழமை மரத்தின் மீது இரு சக்கரவாகனம் மோதிய விபத்தில் மனைவியின் கண் முன்னே கணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பொன்னமராவதி புதுவளவு பகுதியைச் சாா்ந்தவா் ரா. சண்முகம் (54). இவா் ஒசூரில் அடகுக்கடை நடத்தி வந்தாா். அண்மையில் பொன்னமராவதி வந்த இவா் செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் மனைவி பிரேமாவுடன்(50) புதுக்கோட்டையில் வசிக்கும் மகள் வீட்டுக்குச் சென்று விட்டு பொன்னமராவதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.
அப்போது செம்பூதி அருகே சாலையோரம் உள்ள புளியமரத்தின் மீது எதிா்பாராத விதமாக இருசக்கரவாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மனைவி பிரேமா காயங்களுடன் உயிா் தப்பினாா். தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா் சண்முகத்தின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.