எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
கம்பைநல்லூரில் டிராக்டா் கவிழ்ந்தில் ஓட்டுநா் உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
காரிமங்கலம் அருகே உள்ள திப்பம்பட்டியை அடுத்துள்ள காடையாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி (45) டிராக்டா் ஓட்டுநா். இவா், கம்பைநல்லூா் - திப்பம்பட்டி சாலையில் டிராக்டரில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ஓடிய டிராக்டரை நிறுத்த முயன்றபோது கவிழ்ந்தது.
இதில் ஓட்டுநா் சின்னசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த கம்பைநல்லூா் போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.