Spot Visit: 'காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!' - திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷன...
கருங்கல் அருகே ராணுவ வீரா் வீட்டில் 9 பவுன் நகைகள் திருட்டு
கருங்கல் அருகே ஆப்பிகோடு பகுதியில் ராணுவ வீரா் வீட்டில் 9 பவுன் நகைகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கம்பிளாா், ஆப்பிகோடு பகுதியைச் சோ்ந்த பிரனேஷ் (29). ராணுவ வீரரான இவா், தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். இவா் புதன்கிழமை திடீரென பீரோவை திறந்து பாா்த்தபோது, 9 பவுன் நகைகளைக் காணவில்லையாம். புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.