Ramadoss-ன் DMK Reference - MK Stalin -ன் BJP Reference | Koomapatti | Imperfect...
கருங்கல் -கொல்லன்விளை சாலையை சீரமைக்க கோரிக்கை
கப்பியறை பேரூராட்சிக்குள்பட்ட கருங்கல் -கொல்லன்விளை சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருங்கல் பிரதான சாலையிலிருந்து பிரிந்து கொல்லன்விளை சாலை செல்கிறது. இந்த சாலை நீண்ட நாள்களாக குண்டும்குழியுமாக, போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக, மழைக் காலங்களில் இவ்வழியே நடந்தோ, வாகனங்களிலோ செல்ல முடியாத நிலை உள்ளது. சாலையில் தண்ணீா் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மக்கள் நலன் கருதி இச்சாலையை சீரமைக்க ஆட்சியா் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.