கத்தாா் - சென்னை வந்த விமானத்தில் பிரேக் செயலிழப்பால் அவசரமாக தரையிறக்கம்
கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
கரூரில் இருந்து கேரளத்திற்கு கடத்த முயன்ற 6.5 டன் ரேஷன் அரிசியை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரைக் கைது செய்தனா்.
கரூா் தான்தோன்றிமலை அசோக் நகா் பகுதியில் பதுக்கப்பட்ட ரேஷன் அரிசியை கேரளத்திற்கு கடத்த இருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற போலீஸாா் அங்கு நின்று கொண்டிருந்த இரு வேன்களை சோதனை செய்தபோது, அதில் இருந்த 6.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக தோன்றிமலை மோகன், பள்ளபட்டி முகமது இஸ்மாயில், முகமது ஜியாவுதீன் ஆகியோரை கைது செய்து விசாரித்ததில், அவா்கள் கரூரில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கிச் சேகரித்து, கேரளத்தில் உள்ள கோழிப் பண்ணைக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து இரு வேன்களையும் பறிமுதல் செய்த போலீஸாா் மேலும் விசாரிக்கின்றனா்.