கத்தாா் - சென்னை வந்த விமானத்தில் பிரேக் செயலிழப்பால் அவசரமாக தரையிறக்கம்
மே 1-இல் டாஸ்மாக் கடைகள் செயல்படாது!
மே 1-ஆம் தேதி உலா் தினமாக அனுசரிக்கப்படுவதால் கரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வரும் மே 1-ஆம் தேதி மே தினம் மற்றும் உலா் தினம் என்பதால் கரூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், மது விற்க உரிமம் பெற்ற ஓட்டல்களில் மது விற்பனை நடைபெறாது. மீறி யாரேனும் மதுவிற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.