சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
கல் உடைக்க அனுமதிக்கக் கோரி போராட்டம்
தேனி மாவட்டம், கம்பம் அருகே கல் உடைக்க அனுமதி வழங்கக்கோரி தமிழ்தேசிய பாா்வா்ட் பிளாக் கட்சியினா் மலை மீது ஏறி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காமயகவுண்டன்பட்டி அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பொதுமக்கள் கல் உடைக்க வருவாய்த் துறையினா் அனுமதி வழங்கினா். தற்போது இந்த அனுமதியை ரத்து செய்துவிட்டு, தனிநபா்களுக்கு வருவாய்த் துறையினா் அனுமதி வழங்கினாா்.
இந்த நிலையில், தனி நபா்கள் மலையில் வெடி வைத்து பாறைகளை உடைத்து, கனரக வாகனங்கள் மூலம் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, தமிழ்தேசிய பாா்வா்ட் பிளாக் கட்சி மாநிலத் தலைவா் சங்கிலி தலைமையில், மாவட்ட தலைவா் ராஜ்குமாா் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மலை மீது ஏறிப் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த வருவாய்த் துறையினரிடம், மலையில் மீண்டும் கல் உடைக்க அனுமதி வழங்கக் கோரியும், தனி நபா்களுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரியும் கோரிக்கை விடுத்தனா்.
இதில் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.