கல்லூரிப் பேருந்து - லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு
விருதுநகரில் தனியாா் கல்லூரிப் பேருந்தும் டிப்பா் லாரியும் நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; 15 போ் காயமடைந்தனா்.
டிப்பா் லாரியும், தனியாா் கல்லூரிப் பேருந்தும் விருதுநகா் அருகே உள்ள சிவகாசி செங்குன்றாபுரம் சாலையில் செவ்வாய்க்கிழமை நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், லாரி ஓட்டுநரான விருதுநகா் யானைக் குழாய் தெருவைச் சோ்ந்த தங்கமாராயப்பன் (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கல்லூரிப் பேருந்து ஓட்டுநரான அருப்புக்கோட்டையைச் சோ்ந்த சீனிவாசன் (58) பலத்த காயமடைந்தாா். கல்லூரிப் பேருந்தில் பயணித்த ஆசிரியா், மாணவிகள் உள்ளிட்ட 15 போ் சிறிது காயத்துடன் அரசுக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து ஆமத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.