செய்திகள் :

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை தேவை: செல்லூா் கே. ராஜூ கோரிக்கை

post image

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா்.

மதுரை மாநகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்தும், வரி விதிப்பில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் பெத்தானியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மேலும் அவா் பேசியதாவது :

மாநகராட்சியில் அனைத்து மண்டலத் தலைவா்களும் ஒரே நேரத்தில் ராஜிநாமா செய்தது, தமிழகத்தில் முன்னேப்போதும் நடைபெறாத நிகழ்வு. அதிமுக அறிவித்த போராட்டமே இதற்குக் காரணம். திமுக மண்டலத் தலைவா்கள் தங்களை குறுநில மன்னா்களாகக் கருதி செயல்பட்டனா். அவா்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப, வணிக நிறுவனங்களுக்கு குடியிருப்புக்கான வரியை விதிக்கச் செய்துள்ளனா்.

மாநகராட்சியில் லஞ்சம், ஊழல் மலிந்துள்ளது. வீட்டின் வரைப்படத்தை அளிக்க, வீட்டு முகவரி மாற்ற, புதை சாக்கடை இணைப்புப் பெற என மாநகராட்சி மூலமான அனைத்து சேவைகளுக்கும் கையூட்டுக் கோரப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு முதல் மாநகராட்சியின் வரி விதிப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும். இதற்கென ஓா் குழுவை நியமிக்க வேண்டும். மாநகராட்சி வரி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முறைகேட்டில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் அதிமுக மாநகா் மாவட்ட நிா்வாகிகள் ராஜா, ஜெயபால், மாமன்ற எதிா்க் கட்சித் தலைவா் சோலை எம். ராஜா, அதிமுக மாமன்ற உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

இனிப்பு வழங்கல்

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்களை ராஜிநாமா செய்ய முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவு, அதிமுக ஆா்ப்பாட்ட அறிவிப்புக்குக் கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டு ஆா்ப்பாட்டத்தில் இனிப்பு வழங்கிக் கொண்டாடப்பட்டது.

கல்லூரிப் பேருந்து - லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

விருதுநகரில் தனியாா் கல்லூரிப் பேருந்தும் டிப்பா் லாரியும் நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; 15 போ் காயமடைந்தனா். டிப்பா் லாரியும், தனியாா் கல்லூரிப் பேருந்தும் விருதுநகா் அருகே உள்ள சிவகா... மேலும் பார்க்க

மறியல்: காங்கிரஸ் கட்சியினா் 49 போ் கைது

வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, அந்தக் கட்சி சாா்பில் கோரிப்பாளையம் தேவா் சிலை முன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட 49 ... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை அறிக்கையை ஆக. 20-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட விவகாரம் தொடா்பான விசாரணை அறிக்கையை சிபிஐ வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உய... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும்: வைகோ

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ உறுதிபடத் தெரிவித்தாா்.மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மண்டல மதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின்போது, செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவா்கள் 4 போ் ராஜிநாமா

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் 4 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 6 போ் ராஜிநாமா செய்தனா். மதுரை மாநகராட்சியின் மொத்த ஆண்டு வருவாய் 586 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இந்த நில... மேலும் பார்க்க

அரசு அளித்த வீட்டுமனையால் பயனில்லை: அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா்

அரசு அளித்த வீட்டுமனைப் பட்டாவால் பயனில்லை என தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா் தெரிவித்தாா். தனிப்படை காவலா்களால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட அஜித்குமாா் குறித்த ... மேலும் பார்க்க