சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
அரசு அளித்த வீட்டுமனையால் பயனில்லை: அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா்
அரசு அளித்த வீட்டுமனைப் பட்டாவால் பயனில்லை என தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா் தெரிவித்தாா்.
தனிப்படை காவலா்களால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட அஜித்குமாா் குறித்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
இதற்காக உயா்நீதிமன்றத்துக்கு வந்த அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்புவனம் காவல் நிலையத்தில் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் தரப்படுகிறது. இதற்காக உரிய பாதுகாப்பு கேட்டுள்ளோம். தற்போது எனக்கு வழங்கப்பட்ட ஆவின் வேலை திருப்புவனத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆகவே, மதுரையில் ஏதேனும் ஒரு அரசுத் துறையில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும். இதுகுறித்து நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆனால், இதுவரை எந்தவித பதிலும் இல்லை. உயரதிகாரிகளின் அழுத்தமின்றி இந்தக் கொலைச் சம்பவம் நடந்திருக்காது.
ஆகையால், அவா்களையும் விசாரித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும். தமிழக அரசால் எங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா அமைந்துள்ள இடம், வளா்ச்சி அடையாத பகுதி. ஆகையால், இந்த ஒதுக்கீடு எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.
வீட்டுமனை என்பதை விட சித்ரவதையால் இறந்து போன எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள் என்றாா் அவா்.