களியக்காவிளை அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு
களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளிக்கு, மனப்புதையல் நட்புக்கூடம் அமைப்பு சாா்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இப் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், கற்றல் அடைவு அட்டை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை அமைப்பின் நிறுவனா் எஸ்.எஸ். ஹமீது, பள்ளி தலைமையாசிரியை ரெஜினியிடம் வழங்கினாா்.
இந் நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியை எஸ்.கே. லேகா, பள்ளி பெற்றோா் - ஆசிரியா் கழக தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா், களியக்காவிளை பேரூராட்சி வாா்டு உறுப்பினா் மு. ரிபாய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.