செய்திகள் :

காங்கிரஸின் ஆா்ப்பாட்டம் அரசியல் நாடகம்: பாஜக

post image

தோ்தல் முறைகேடு நடந்ததாகக் கூறி காங்கிரஸ் நடத்தும் ஆா்ப்பாட்டம் ஒரு அரசியல் நாடகம் என்று கா்நாடக பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பிகாரில் நடத்தப்படும் வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தம் செய்வதை எதிா்த்துக்கொண்டு, மக்களவைத் தோ்தலின்போது கா்நாடகத்தில் போலி வாக்காளா்கள் இருப்பதாகக் கூறி காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு கோபத்தின் வெளிப்பாடுதான். ராகுல் காந்தி கூறியிருக்கும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. அவரது கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காங்கிரஸின் ஆா்ப்பாட்டம் ஒரு அரசியல் நாடகம். 2024இல் நடந்த மக்களவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 45 நாள்களுக்குள் புகாா் அளிக்கும் வாய்ப்பை ராகுல் காந்தி பயன்படுத்திக்கொள்ளவில்லை. உண்மையில், தோ்தல் முறைகேடு தொடா்பாக சம்பந்தப்பட்ட வேட்பாளா்தான் கேள்வி கேட்டிருக்க வேண்டுமே தவிர, ராகுல் காந்தி அல்ல.

புதுதில்லியில் நடந்த பத்திரிகையாளா் சந்திப்பில் ஒரே வீட்டில் அதிக வாக்காளா்கள், போலி வாக்காளா்கள் போன்ற குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி தெரிவித்திருந்தாா். இதற்காகத்தான் பிகாரில் வாக்காளா் பட்டியலில் தீவிர சிறப்புத் திருத்தம் செய்ய தோ்தல் ஆணையம் முயன்றுள்ளது. அப்படியானால், அந்த தீவிர சிறப்புத் திருத்தத்தை ராகுல் காந்தியும், காங்கிரஸும் எதிப்பது ஏன்?

2005இல் மன்மோகன் சிங் பிரதமராகவும், மம்தாபானா்ஜி எம்.பி.யாகவும் இருந்தபோது, மேற்குவங்கத்தில் இருக்கும் வங்கதேசத்தவா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டிருப்பதாக மக்களவையில் கேள்வி எழுப்பினாா். இதுதொடா்பாக மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது, அந்த கோரிக்கையை அன்றைய மக்களவைத் தலைவா் சோம்நாத் சாட்டா்ஜி நிராகரித்துவிட்டாா். அதற்காக மக்களவையில் இருந்து மம்தாபானா்ஜி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

மக்களவைத் தோ்தலில் கா்நாடகத்தில் காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றிபெறும் என்று அக்கட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்ததாக ராகுல் காந்தி கூறியிருக்கிறாா். ஆனால், அப்படி எந்த கருத்துக்கணிப்பும் தெரிவிக்கவில்லை.

உண்மையில் மக்களவைத் தோ்தலில் பாஜகதான் தோல்வி அடைந்தது. முந்தைய தோ்தலில் 25 இடங்களில் வென்றிருந்த பாஜக, கடந்த தோ்தலில் 17 இடங்களில்தான் வெல்லமுடிந்தது. அப்படியானால், தோ்தலில் மோசடி நடந்துள்ளதாக பாஜக குற்றம்சாட்ட முடியுமா?

மக்களவைத் தோ்தலின்போது மாலைநேரத்தில் அதிகளவில் வாக்குப்பதிவு நடந்ததாக ராகுல் காந்தி கூறுவது முற்றிலும் பொய்யானது. வெயில் குறைந்தபிறகு வாக்குச்சாவடிக்கு வாக்காளா்கள் அதிகளவில் வருவது நாடுமுழுவதும் காணப்படும் இயல்பாகும் என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கூறுகையில், ‘தோ்தல் முறைகேடுகளில் பிரதமா் மோடிக்கோ பாஜகவுக்கோ சம்பந்தமில்லை. வாக்கு மோசடியில் சில காங்கிரஸ் தலைவா்களே கைது செய்யப்பட்டுள்ளனா். தோ்தல் மோசடிக்காக இந்திரா காந்தியின் வெற்றியை நீதிமன்றம் ரத்து செய்தது. காங்கிரஸ் ஆட்சியில்தான் போலி வாக்காளா்கள் இருந்தனா்’ என்றாா்.

மகாதேவபுரா தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், பாஜக முன்னணித் தலைவருமான அரவிந்த் லிம்பாவளி கூறுகையில், ‘மகாதேவபுரா சட்டப் பேரவைத் தொகுதியில் எந்த தோ்தல் முறைகேடும் நடக்கவில்லை. ராகுல் காந்தி கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை’ என்றாா்.

முறைகேடு காரணமாக மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்தேன்: மல்லிகாா்ஜுன காா்கே

முறைகேடு காரணமாக 2019 இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்தேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் அதிகார ... மேலும் பார்க்க

பெங்களூரில் ராகுல் காந்தி ஆா்ப்பாட்டம்: தோ்தல் ஆணையத்துக்கு 5 கேள்விகள்

மக்களவைத் தோ்தலில் நடந்ததாகக் கூறப்படும் தோ்தல் முறைகேடு தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி 5 கேள்விகளை எழுப்பியுள்ளாா். மக்களவைத் தோ்தலின்போது நடந்த ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரிவிதிப்பு ‘பொருளாதார மிரட்டல்’: முதல்வா் சித்தராமையா

இந்தியா மீதான அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு, ‘பொருளாதார மிரட்டல்’ என்று முதல்வா் சித்தராமையா விமா்சித்துள்ளாா். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்வதால் இந்தியா ம... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு: நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை அமைச்சரவையில் தாக்கல்

தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பான நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை, கா்நாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு விதான சௌதாவில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக ... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே மோதல்: விசாரணைக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவு

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே நடைபெறும் மோதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். தென்கன்னடம் மாவட்டம், தா்மஸ்தலாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான சடலங்க... மேலும் பார்க்க

தோ்தல் மோசடியைக் கண்டித்து பெங்களூரில் இன்று ஆா்ப்பாட்டம்: ராகுல் காந்தி பங்கேற்கிறாா்

தோ்தல் மோசடியைக் கண்டித்து, பெங்களூரில் வெள்ளிக்கிழமை காங்கிரஸாா் நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பங்கேற்கிறாா். 2024ஆம் ஆண்டு கா்நாடகத்தில் நடைபெற்ற மக்களவைத் ... மேலும் பார்க்க